கர்மவீரர்
ஏழை பங்காளர்
படிக்காத மேதை
என பலராலும் போற்றப்படுபவர். நம் மனதில் இன்றும் நிலைத்து நின்றுக் கொண்டிருக்கும் தலைவர்களுள் ஒருவர் கர்மவீரர் காமராசர். தமிழகத்தை தலைநிமிரச் செய்வதற்காக அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்த மாமனிதன் பெருந்தலைவர் காமராசர் ஆவார்.
மூடி இருந்த 6000 பள்ளிக்கூடங்களைத் திறந்தார். மேலும் அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் 12,000 பள்ளிகளைத் திறந்தார். மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரம்பிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைகளைக் கட்டினார். 2 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்தார். அதுமட்டுமில்லாமல், மேலும் 5 முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மக்களுக்காக 8 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
சி.பி.எஸ் குளோபல், திருமழிசை பள்ளியில் காமராசருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக ஜூலை 15 ம் நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் திருமதி பூமகள், திருமதி சுகன்யா ஆகியோரின் உதவியால் ஆறாம் வகுப்பு மாணவி மதுஸ்ரீ ஆங்கிலத்தில் காமரசர் பற்றிய வாழ்க்கை வரலாறு,மதிய உணவுத்திட்டம், அரசியல் வாழ்க்கைப் பற்றி விளக்கிக் கூறினார். ஐந்தாம் வகுப்பு மாணவன் லக்க்ஷன் தமிழில் காமராசரின் சாதனைகளைப் பற்றியும் “கிங் மேக்கர்” என பெயர் பெற்ற காரணத்தையும் எடுத்தியம்பினான். பின்னர் காமராசரின் வாழ்க்கை வரலாறு, எளிமை, அரசியலில் அவர் சாதனைகள், ஆகியவற்றைக் காணொளிக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டன. வரவேற்பறையில் காமராசரின் உருவப்படம் வரைந்து ஒட்டப்பட்டன. நாமும் காமராசரைப் போல் வாழ்ந்து பல சாதனைகள் படைக்க வேண்டும் என அறிவுரை கூறி பள்ளி இறைவணக்க கூட்டம் நிறைவு பெற்றது.