‘’தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’’.
குறள்: 236
என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெருந்தலைவர் காமராசர் புகழ் உலகம் எங்கும் இன்றும் பேசப்படுகின்றது. தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவராக பெருந்தலை வர் கருதப்படுகிறார். பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தை ஒன்பது ஆண்டு கால ஆட்சி செய்து நாட்டையும், நாட்டு மக்களையும் வழிநடத்தி வளப்படுத்தினார். 1976இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி பெருமை படுத்தியது. காமராசர், இந்தியாவை தொழில் வளர்ச்சியிலே இரண்டாவது மாநிலமாக அவருடைய ஆட்சியில் உருவாக்கினார், தமிழகத்தில் 20 தொழிற்சாலைகளை உருவாக்கி, விவசாயிகளுக்கான பாசனத்திட்டத்தை
அறிமுகப்படுத் தினார். இவரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று அனைவராலும் பாராட்டுபெற்று கொண்டாப்பட்டது.
சி.பி.எஸ் குளோபல் பள்ளியில் 15. 7 .2023-ஆம் நாள் காமராசருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பள்ளி இறைவணக்க கூட்டத்தில் ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழ் ஆசிரியை திருமதி. பூமகள் அவர்களும் ,திருமதி. S.சுகன்யா அவர்களும் காமராசரின் வாழ்க்கை வரலாறு, மதிய உணவு திட்டம் உருவான கதை மற்றும் அரசியல் வாழ்க்கை பற்றியும் எடுத்துக் கூறினார்கள். பின்பு மாணவர்களுக்கு மின்னணுப் பலகை மூலம் காமராசரின் வாழ்க்கை வரலாறு காணொளி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
(CAIE-6 TO 8) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காமராசரின் உருவத்தை வரையும் போட்டி நடத்தப்பட்டது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு (IGY1&2)மாணவர்களுக்கு (PPT)மின்னணு விளக்கக் காட்சி மூலம் காமராசரைப் பற்றி மாணவர்கள் எடுத்துரைத்தார்கள். மாணவர்கள் கூட்டத்தில் IGCSE ஒருங்கிணைப்பாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்கள், காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு காமராசரின் சிறப்பைப் பற்றி ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். சி. பி. எஸ் குளோபல் பள்ளியின் வரவேற்பறையில் மாணவர்கள் அட்டையில் காமராசரின் உருவத்தை வரைந்தும் காமராசரைப் பற்றிய குறிப்புகளை எழுதியும் ஒட்டினார்கள்.
‘’ காமராசர் படிக்காத மேதை அல்ல தமிழகத்தையே படிக்க வைத்த மேதை ‘’-ஜூலை 15ஆம் தேதி காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக இன்று கொண்டாடியும், வாழ்நாளில் அவரைப் போல் நாமும் ஒரு புகழ்மிக்க சாதனையாளராக திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டு நிகழ்வு முடிந்தது.










