Thirumazhisai

காமராசரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Written by cpsglobalblog

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

– குறள் 1033

என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, பெருந்தலைவர் காமராசர் தன்னலமற்ற உழைப்பைக் கொண்டு உயர்ந்தவர்  அதனால் தான் இவர் புகழ் உலகம் எங்கும் இன்றும் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவராக பெருந்தலைவர் கருதப்படுகிறார். பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தை ஒன்பது ஆண்டு கால ஆட்சி செய்து நாட்டையும், நாட்டு மக்களையும் வழிநடத்தி வளப்படுத்தினார். 1976ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.  தமிழ்நாட்டில் 20 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கி, விவசாயிகளுக்காக அமைப்புகளை உருவாக்கினார்.இவரின் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று அனைவராலும் கொண்டாப்பட்டது. 

 2025 ஜூலை 15 அன்று அவரது 123வது பிறந்த நாளை (கல்வி வளர்ச்சி நாள்)   சி. பி. எஸ் குளோபல்  பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடினர். பள்ளி அளவிலான கூட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். (CIE 4&5) நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், காமராசரின் சாதனைகள், “King Maker” என அழைக்கப்படக் காரணம், மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராசர், கல்வியை அனைவருக்கும் சென்றடையச் செய்ய வேண்டும் என்பதற்காக இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், நூலகங்கள், பள்ளிக்கூட கட்டடங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை உருவாக்கினார். அவருடைய உழைப்பால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர் என்பதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பினை விளக்கிக் கூறினார்கள்.

ஒன்பதாம் வகுப்பு மாணவி சாய் வர்ஷா, காமராசரின் வாழ்க்கை வரலாற்றை அழகாக எடுத்துரைத்தார். அவரது பள்ளி நாட்களிலிருந்து தேசிய அரசியலுக்குள் நுழைந்த வரையிலான பயணத்தை சுருக்கமாக விவரித்தார்.

நிகழ்வின் போது, காமராசரின் வாழ்க்கை, அவரது சாதனைகள், கல்விக்கான பங்களிப்பு மற்றும் அரசியல் மரியாதை பற்றிய ஒரு சிறந்த ஆவணக் காணொளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக திரையிடப்பட்டது.
இந்த காணொளி மூலம் மாணவர்கள் காமராசரைப் பற்றி மேலும் ஆழமாக புரிந்து கொண்டனர். குறிப்பாக, அவரது நேர்மை, எளிமை, மற்றும் இந்திய அரசியலில் அவர் வகித்த பிரதான பங்கு மாணவர்களின் மனதில் உறைந்துவிட்டது. இந்த நிகழ்வு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் நல்லாட்சிக்கான அடிப்படையான ஆளுமைகள் யாரென்பதைக் கொடிகட்டிப் பேசுகிறது. 

ஆறாம் வகுப்பு மாணவன் லக் ஷன், விழாவை சிறப்பாக  தொகுத்து வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.  

காமராஜரை நினைவுகூர்வது ஒரு மரியாதை அல்ல, அது நம் பொறுப்பு என்று மாணவர்களுக்கு எளிமையாக கூறி நிகழ்வு நிறைவு பெற்றது.

 

About the author

cpsglobalblog

Leave a Comment