Thirumazhisai

பகிர்ந்துண்ணும் பண்பாட்டின் திருநாள் பொங்கல்

Written by cpsglobalblog

வானின்று உலகம் வழங்கி வருதலால்
  தானின்று உலகம் தாம் போற்றும் மழை

 – திருவள்ளுவர் (திருக்குறள்)

பாரம்பரியமும் பண்பாடும் உயிர்ப்புடன் வாழும் திருநாள் பொங்கல். தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் வெளிப்படும் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று பொங்கல் விழா. இது இயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி செலுத்தும் விழா.

நம் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா அனைவரின் உள்ளத்தையும், மகிழ்ச்சியால் நிரப்பின.  அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். முதலில் மாணவர்கள் இறைவணக்கத்துடன் தொடங்கினர், மேலும் உலக செய்திகள், திருக்குறள் உரைகள் இன்றைய கருத்துகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். மாணவர்கள் பொங்கலின் முக்கியத்துவம் பற்றி, கூறிய உரை ஒவ்வொருவருக்கும் நம் பண்பாட்டின் பெருமையைப் பறைச்சாற்றுவதாய் அமைந்தது. அடுத்து நடைபெற்ற (‘ராம்ப் வாக்’) ஒய்யார நடை நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள், பாரம்பரிய சார்ந்த உடையில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் இதயத்தை ஈர்த்தனர். மாணவர்கள் அணிந்த பாரம்பரிய உடைகளும், அவற்றின் அழகிய அசைவுகளும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றின. பாடல்கள், நாட்டுப்புற நடனங்கள், மற்றும் கலைநிகழ்ச்சிகள் விழாவை இன்னும் இனிதாக்கின.

“பகிர்ந்துண்ணும் பண்பாட்டின் திருநாள் பொங்கல்”  மாணவர்களுக்கான பொங்கல் விளையாட்டுகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கால்களைச் சரியாக பதித்தல், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் லெமன் மற்றும் ஸ்பூன், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் பலூன் உடைத்தல், நான்காம் வகுப்பு மாணவர்கள் ஊசி நூல் கோர்த்தல், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தட்டு சேகரித்தல், ஆறாம் வகுப்பு மாணவர்கள் முறுக்குக் கடித்தல், ஏழாம் வகுப்பு மாணவர்கள் இசை நாற்காலி, எட்டாம் வகுப்பு மாணவர்கள் நொண்டி அடித்தல் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கங்காரு ஓட்டம் பதினோறாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் உறியடி போன்ற விளையாட்டுகளை ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி மிகவும் சிறப்பாக விளையாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியாக தங்கள் திறன்களை வெளிப்படுத்தினார்கள். 

இறுதியில் நம் பள்ளியின் தமிழாசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் கூறியதுடன், விழா இனிதே முடிவுற்றது. இந்தப் பொங்கல் விழா மாணவர்களுக்கு மகிழ்ச்சி, பண்பாடு, ஒற்றுமை ஆகியவற்றை உணர்த்தும் ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. தமிழர் திருநாளான பொங்கல், அனைவரின் மனதிலும் இனிய நினைவாக நிலைத்தது.

 

About the author

cpsglobalblog

Leave a Comment