Thirumazhisai

பொங்கல் விழா – ‘’ தமிழர் போற்றும் நன்னாள், உழவர் போற்றும் பொன்னாள் ’’

Written by cpsglobalblog

பொங்கல் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும் வாழ்வின் அழகையும் கொண்டாடும் தருணம். இந்த நாள் நம் பள்ளியில் நடைபெற்ற விழா அனைவரின் உள்ளத்தையும், மகிழ்ச்சியால் நிரப்பின.  அனைத்து ஆசிரியர்களும்,  மாணவர்களும் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டு விழாவைச்  சிறப்பு செய்தனர். முதலில்    மாணவர்கள்  இறைவணக்கத்துடன் தொடங்கி , உலக செய்திகள் , திருக்குறள் உரைகள் மற்றும் கருத்துகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மாணவர்கள் பொங்கலின்  முக்கியத்துவம் பற்றி,  கூறிய  உரை ஒவ்வொருவருக்கும் நம்   பண்பாட்டின்  பெருமையைச் சுட்டிக்காட்டியது.

அடுத்து நடந்த   இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மாநிலம் சார்ந்த  உடையில்  (‘ராம்ப் வாக்’) ஒய்யார நடை நிகழ்ச்சி பார்வையாளர்களின் இதயத்தைக் கவர்ந்தன.  மாணவர்கள் அணிந்த பாரம்பரிய உடைகளும், அவற்றின் அழகிய அசைவுகளும் நிகழ்ச்சிக்குச்   சிறப்பளித்தன.  பாடல்கள், நாட்டுப்புற நடனங்கள், மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் விழாவுக்கு மேலும் புத்துணர்வை தந்தன.

பொங்கல் விழாவுக்கு  செலவு செய்வது தேவையானதா? தேவையற்றதா? என்ற தலைப்புக்கு   ஒன்றாம் வகுப்பு  முதல் ஐந்தாம் வகுப்பு வரை   விவாதம்  செய்த மாணவர்களின் கருத்துகள் , அனைவரின் மனதிலும் ஆழமாகப்  பதிந்தன.மாணவர்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவையாக இருந்தன. நிகழ்ச்சியில்   இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்து, இந்தப் பொங்கல் விழா நம் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருமைப்பாட்டையும் மகிழ்ச்சியையும் அளித்தன.

விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான்நாம் சோற்றில்   கை வைக்க முடியும்,”பொங்கல் என்பது நம் வாழ்வில் மகிழ்ச்சி, வளம் மற்றும்  அடையாளத்தை  வெளிப்படுத்தும் விழாவாகும். “விவசாயத்தின் வாழ்வு, உழவர்களின்  பெருமை” போன்ற  முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன..   மாணவர்களுக்கான பொங்கல் நடவடிக்கையில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தவளை ஓட்டம், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பலூன் உடைத்தல், மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நொண்டி அடித்தல் , நான்காம் வகுப்பு மாணவர்கள் முறுக்கு கடித்தல் , ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குட்டிக்கரணம் அடித்தல் போன்ற விளையாட்டுகளை மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி மிகவும் சிறப்பாக விளையாடி மகிழ்ந்தனர். ஆறாம்வகுப்பு முதல் பன்னிரண்டாம்வகுப்பு, மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திற்கு முன்பு கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மகிழ்ச்சியாக தங்கள் திறன்களை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் நம் பள்ளி முதல்வர்  ஸ்ரீதேவி வரகவி அவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் கூறியதுடன், விழா இனிதே முடிவுற்றது.

A Kaleidoscopic Celebration: Pongal at CPS Global School,Thirumazhisai

Pongal, the festival of gratitude to nature and celebration of Tamil culture, was vibrantly observed at CPS Global School, Thirumazhisai. The air buzzed with excitement as students, adorned in vibrant traditional attire. The school grounds transformed into a kaleidoscope   with colorful rangoli crafted by teachers setting the festive mood. A special assembly, led by IGYR2, highlighted the four-day celebration, fostering cultural appreciation. During the assembly, Term 2 Class Representatives were badged, marking a proud moment for the students. The event featured a charming ramp walk by CIE-2A and 2B, a self-written rap by CIE-8 students, and traditional Pongal cooking, with decorated pots and kolams enhancing the ambiance.

The festivities continued with folk songs, a Tamil song by IGYR1, and a lively Pattimandram by CIE1-CIE 6 students on “Festivals and Expenses,” offering insights into managing festival costs. Students also participated in Thirukkural and Bharathiyar poem recitations. The special assembly concluded with a prize distribution and an inspiring address by HOS Ms. Sreedevi. Outdoor activities included frog jumping, balloon bursting, hopscotch, somersaults, and collaborative rangoli creation by CIE-6 to IB2 students.  Students captured the joyous moments at the “Celebration Corner,” preserving memories of this vibrant Pongal celebration. Heartfelt thanks to all contributors for making the day special.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

About the author

cpsglobalblog

Leave a Comment